பள்ளி ஆசிரியையை ஆபாசப் படம் பிடித்து மிரட்டிய கள்ளக்காதலன் கைது

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (15:21 IST)
பள்ளி ஆசிரியை ஆபாசப் படம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிக்கும் ஆசிரியை நாகஜோதி. இவர், மதுரை மாவட்டம் டி. கள்ளிப்பட்டியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
 
இதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் காளீஸ்வரன். அவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நாகஜோதிக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
 
இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இதற்கிடையில், காளீஸ்வரனுக்கு இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பு இருந்துள்ளனது. இது குறித்து நாகஜோதி காளீஸ்வரனிடம் தட்டிக்கேட்டுள்ளார்.
 
அப்போது காளீஸ்வரன், இருவரும் உல்லாசமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்த காட்சிகளை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து காளீஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகஜோதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காளீஸ்வரனை கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்