தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சில தினங்களுக்கு முன்னர் நுழைந்து சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது துணை ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
துணை ராணுவம் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையையும் பல கேள்விகளையும் எழுப்பியது. மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிடுவதாக கூறப்பட்டது. மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பி. ஆகியோர் இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலை இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகனராவ் தான் ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறினார். மேலும் சோதனை நடத்துவதற்காக வாரண்டில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் தன்னுடைய மகன் பெயர் தான் உள்ளது என்றார். அதை வைத்துக்கொண்டு எப்படி தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த முடியும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் ராணுவம் தலைமைச் செயலகத்தில் நுழைந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்தில் ராணுவம் நுழைந்திருக்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.