அவர் பேரைச் சொன்னால்..ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு - அமித் ஷா

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (23:51 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த ஓட்டுகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

எனவே  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது

இந்நிலையில், இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், பிரதமர் மோடி நாட்டிலுள்ள விவசாயிகள், மீனவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறார். ஆனால்ஸ்டாலின் அவரது மகனைக்குறித்துக் கவலைப்படுகிறார். மேலும், உதயநிதியைக் குறித்துப் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. பாஜக தமிழகத்திற்குப் பாடுபடுகிறது. ஆனால் திமுக –காங்கிரஸ் குடும்பத்திற்காகப் பாடுபடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்