நல்லவர்கள் போல் நடிப்பவர்களின் ஆட்சி - யாரை சொல்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ்?

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (13:01 IST)
தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி சகாயம் ஐ.ஏ.எஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற, மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு உரையாடினார்.  அப்போது அவர் பேசியதாவது:
 
சமீபகாலமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது தேசத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மாற்றங்களுக்காக மக்கள் போராட முன் வருவதில்லை என்பதில் எனக்கு வருத்தம் இருந்தது. தமிழக மக்கள் மீது நம்பிக்கை இல்லை என கூறிவந்தேன். ஆனால், ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் நடந்த போராட்டம், இந்த மண்ணுக்கான போராட்டம் என்பதை புரிந்து கொண்டேன். அது காளைக்கான போரட்டம் என்றாலும் நாளைக்கான போராட்டம். 
 
தமிழகம் நல்லவர்களின் ஆட்சியை பார்த்திருக்கிறது. ஆனால், தற்போது நல்லவர்களைப் போல நடிப்பவர்களின் ஆட்சி நடைபெறுகிறது.
 
மதுவின் பிடியில் இருந்து இளைஞர்கள் விடுபடவேண்டும். இனிமேல் பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்” என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்