உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் உரையை வாசிக்கவில்லை..! ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

Senthil Velan
திங்கள், 12 பிப்ரவரி 2024 (14:39 IST)
தமிழக அரசு தயாரித்த உரையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததால் உரையை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
 
தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், உரை தொடக்கத்திலும், முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் ஆளுநரின் ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது என்றும் தவறான அறிக்கை, பாகுபாடான அரசியல் கருத்துகளை வெளியிடுவதாக ஆளுநர் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆளுநரின் உரையானது அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
 
கண்ணியத்தை குறைத்த சபாநாயகர்: 
 
தனது செயல்பாடுகளால் பேரவை பதவிக்கான கண்ணியத்தை சபாநாயகர் குறைத்து விட்டதாகவும், தேசிய கீதத்திற்காக ஆளுநர் எழுந்தபோது சபாநாயகர் கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றும் ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

ALSO READ: "ஜன கண மன இனிமேதான் பாடுவோம்".! ஆளுநரை கிண்டலடித்த சபாநாயகர் அப்பாவு..!!

கோட்சேவுடன் ஆளுநரை தொடர்புபடுத்தி சபாநாயகர் பேசியதால், கண்ணியம் கருதியே சபையிலிருந்து ஆளுநர் வெளியேறியதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்