என் மீது வழக்குப் போடும் நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன் - ஆ.ராசா

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (15:25 IST)
என்  மீது வழக்குப் போட வேண்டுமென்கிறார்கள், அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு,  அதிமுக, தினகரன்   
உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.

ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் ஆ ராசாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி என்பவர் திமுக எம்பி ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாட்கள்  நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் @arivalayam பாராளுமன்ற உறுப்பினர் திரு @dmk_rajaஅவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் திரு @dmk_rajaவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த @BJP4TamilNaduமாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?

@arivalayamஅரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்’’  என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்து மதம் குறித்துத் தான் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் திமுக எம்.பி.,  ஆ.ராசா கூறியுள்ளதாவது:  ‘’இந்து மதத்தை அவதூறாகப் பேசிப்விட்டார். ராசா மீது வழக்குப் போட வேண்டுமென்கிறார்கள்,

அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன். உங்கள் மனுஸ்மிருதியையும், உங்கள் கீதையையும் படித்துக்காடி, நீங்கள் யார் என்பதைத் தோலுரிக்கவில்லை என்றால் நான் கலைஞரின் பிள்ளை  இல்லை ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்