ஹுண்டாய் மோபிஸ் நிறுவனம் ரூ.2.25 கோடி நிதியுதவி!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (20:45 IST)
கடந்தாண்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகள் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் வெள்ளத்தால் பாதித்தனர். இவர்களுக்கு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறது. தன்னார்வலர்க்ளும் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹுண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்க் கி சுல், மூத்த பொது மேலாளர்கள்  கிம் பியுங் கியு, செந்தில் ராஜ்குமார், மனிதவள தலைவர்  எஸ்.பிரேம் சாய் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.  மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2.25 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்
 
அதேபோல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் இப்ரஹிம் கலிஃபுல்லா, தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் . டி.முருகேசன் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் சார்பில் மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 12 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள் என்று அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்