ஏடிஎம்-ல் பணம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (16:11 IST)
உங்கள் பகுதியில் உள்ள ஏடிஎம் அல்லது மற்ற ஏடிஎம்களில் பணம் இருக்கிறதா என்பதை அறிய எளிய முறை உள்ளது. www.cashnocash.com என்ற இனையதளத்திற்கு சென்று பணம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றவும், அன்றாட செலவுகளுக்கு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
சில்லரை தட்டுபாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் 10 சதவீதம் ஏடிஎம் மையங்கள்தான் வேலை செய்கிறது. அதுவும் ஒருநாளைக்கு ஒருமுறைதான் பணம் நிரப்பப்படுகிறது. அதனால் விரைவாக ஏடிஎம்களில் பணம் முடிந்துவிடுகிறது.
 
எப்போது ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படும் என்று பொதுமக்கள் ஒவ்வொரு ஏடிஎம் மையமாக தேடி அழைகின்றனர். இந்நிலையில் ஏடிஎம்களில் பணம் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய எளிமையான முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
 
குயிக்கர் மற்றும் நாஸ்காம் ஆகியவை இணைந்து www.cashnocash.com என்ற இணையதளத்தை உருவாகியுள்ளனர். இதில் சென்று உங்கள் பகுதி அஞ்சல் பின்கோட் எண்ணை டைப் செய்ய வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்கள் பற்றிய பட்டியல் தோன்றும். 
 
பணம் எடுத்தவர்கள் அல்லது பணம் ஏடிஎம்மில் இல்லை என்பதை அறிந்தவர்கள் பணமுள்ளதா, கூட்டம் எந்தளவிற்கு உள்ளது, எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் போன்ற தகவல்களை பதிவு செய்யும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொருவரும் இந்த முறையில் தகவல்களை பதிவு செய்தால், அது எல்லோர்க்கும் உதவியாய் அமையும்.
அடுத்த கட்டுரையில்