ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ள ஒத்த செருப்பு.... ரஜினி வில்லன் ஹீரோ?

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (13:08 IST)
இயக்குநர் பாக்கியராஜிடம்  உதவி இயக்குநராக இருந்த ரா. பார்த்திபன், புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறியப்பட்டார். இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் புதிய சிந்தனைகளுடன் இளைய இளைஞர்களுக்கு போட்டியாக சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்து வருகிறது.
 
இந்நிலையில், இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்வது குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில்,’Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது.... ’என ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் அவர் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்