2 வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்! – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (09:41 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் அடுத்து வரும் 2 வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. ஒருபக்கம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 55 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 80% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்