சென்னையின் பல பகுதிகளில் கனமழை: தீபாவளி வியாபாரம் பாதிப்பு!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (16:47 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை திநகர், தேனாம்பேட்டை, பாண்டிபஜார், சைதாப்பேட்டை உள்பட முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது 
 
குறிப்பாக தி நகர் பகுதியில் தீபாவளி  வியாபாரம் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கனமழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்
 
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடைகள் திறக்கப்படாத நிலையில் தற்போது தான் தீபாவளி வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மழையால் அந்த வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் வியாபாரிகள் கடும் வருத்தத்தில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்