சென்னையில் வெளுத்து வாங்க போகும் மழை: நார்வே வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (07:43 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நேற்று மாலை திடீரென வானம் இருண்டு சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது என்பதும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சென்னை மழையை எதிர் நோக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை செய்து வருகிறது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிப்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் தற்போது நார்வே நாட்டின் தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று சென்னையில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது
 
நார்வே நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் செயலி ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது போல் இந்த ஆண்டும் வெள்ளம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக இன்று முதல் வரும் 30ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்