சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் கீழ் அடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வழிவதாகவும் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. இதனை அடுத்து 19 மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மழை பெய்யும் 19 மாவட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை மதுரை விருதுநகர் ராமநாதபுரம், பெரம்பலூர்