ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனை இன்று உறுதியாகுமா?

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (07:55 IST)
நிர்பயா கொலை வழக்கில் நேற்று குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை போல் இன்று ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதியாகுமா? என்பது சிறிது நேரத்தில் தெரியவரும்
 
சென்னை போரூர் பகுதியை  சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து அதன் பின்னர் கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாயாரையும் கொலை செய்து தலைமறைவானார் என்பதும் அதன் பின்னர் தனிப்ப்டையினர். தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பில் தஷ்வந்துக்கு மரண தண்டனை உறுதி செய்யப்படுமா? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்