ஆலங்குளம் தொகுதியில் திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் ஹரி நாடார்

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (16:48 IST)
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே முன்னிலையில் இருந்து வரும் நிலையில் ஆலங்குளம் தொகுதியில் திமுக அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கும் கட்சிகளுக்கு கொடுக்கும் வகையில் ஹரிநாடார் அதிக வாக்குகளை பெற்று வருகிறார் 
 
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன் 17 ஆயிரத்து 989 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் ஹரிநாடார் உள்ளார் அவருக்கு 16 ஆயிரத்து 825 வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 16591 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வேட்பாளரிடம் இருந்து மிகக்குறைந்த வாக்கு வித்தியாசம் இருப்பதால் ஹரிநாடார் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்