ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி!!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (13:58 IST)
ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - டி.கே.ரங்கராஜன் !!

தமிழகத்தின் அமைதியைக் குலைக்க நினைக்கும் பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.  ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த செவ்வாய் அன்று, ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
 
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே ரங்கராஜன், டெல்லியில் நடப்பது போன்ற வெறியாட்டம் தமிழகத்திலும் நடப்பதற்குத் தூண்டும் வகையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசி வருகிறார். தமிழகத்தில் அமைதியை குலைக்க நினைக்கும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்