100 நாட்களுக்கு திமுக அரசை விமர்சிக்க மாட்டேன்… ஹெச் ராஜா கருத்து!

Webdunia
புதன், 5 மே 2021 (16:50 IST)
தமிழகத்தில் அமையவுள்ள திமுக ஆட்சியை 100 நாட்களுக்கு விமர்சிக்க மாட்டேன் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக பெரும்பாண்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் திமுக ஆட்சியை 100 நாட்களுக்கு தான் விமர்சிக்க போவதில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரத்துக்கு எதிரான போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் ‘100 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் 100 நாட்கள் திமுக ஆட்சியை விமர்சிக்க மாட்டேன்’ என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்