போதைப்பொருள் வைத்திருந்த அரசு அதிகாரி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:33 IST)
கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்த திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருண் மதுரை மத்திய போதை தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த அருண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும் அம்மா மாவட்ட அதிமுகவின் பிரமுகராகவும் இவர் உள்ளார். இவர் கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருப்பதாக மதுரை மத்திய போதை தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதனையடுத்து, நேற்று இரவு இவரது வீட்டில் போதை தடுப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரின் காரில் 250 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்