சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கும் ராஜேந்திர பாலாஜி? : களம் இறங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

செவ்வாய், 12 ஜூன் 2018 (16:08 IST)
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1996ம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த காலத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின் அறிக்கையை வருகிற ஆகஸ்டு 3ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை வருகிற ஆகஸ்டு 6ம் தேதி ஒத்தி வைத்தனர்.
 
அதிமுக அமைச்சரராக உள்ள ராகேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவுள்ள விவகாரம் அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்