தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் உரையை சமர்பித்து வரும் ஆளுனர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும்.
இந்த கூட்டத்தொடரில் தொடக்கமாக ஆளுனர் உரையை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வாசித்து வருகிறார். அதில் சிறப்பம்சங்களாவன..
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நோக்கத்திற்கு எதிராக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்.
சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்
புதிய ரேசன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்கும் வகையில் நடவடிக்கை
கொரோனா குறைந்த பிறகு முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள 69% இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.