தமிழக ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் என்று பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும் விழாவில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே தொடர்பை குறிப்பிடவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என்றும் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு என்பது இல்லை என்பதால் தமிழகம் என்ற வார்த்தையை நிகழ்ச்சிக்காக பயன்படுத்தினேன் என்றும் கூறினார்
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்வதோ தவறானது என்றும் எதார்த்தத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை என்னும் வாதங்கள் விவாத பொருளாகி உள்ள நிலையில் அதற்கு முடிவு கட்டவே இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.