சரசரவென சரிந்த தங்கம் விலை! – கொண்டாட்டத்தில் மக்கள்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (11:16 IST)
கடந்த சில நாட்களில் தங்கம் விலை 50 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சமீப நாட்களாக கொரோனா காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை இமாலய உச்சத்தை அடைந்தது. இதனால் தங்கம் வாங்குவதே கனவாக போய் விடுமோ என மக்கள் அஞ்சிய நிலையில் தங்கம் விலை தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.229 குறைந்து ரூ.5,013க்கு விற்பனையாகி வருகிறது.

எனினும் தங்கம் விலை கூடியதைவிட மெல்ல மெல்லவே குறைந்து வரும் நிலையில் பழைய மதிப்பிற்கு எப்போது திரும்பும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்