சென்னையில் குப்பை கட்டணம் வசூல் திடீர் நிறுத்தம்:சென்னை மாநகராட்சி அதிரடி

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (10:53 IST)
சென்னையில் சொத்துவரி போலவே ஒவ்வொரு வீட்டினரும் ஒவ்வொரு நிறுவனத்தினரும் குப்பை வரியும் செலுத்த வேண்டும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வரி வசூல் ஜனவரி 1 முதல் வசூல் செய்யப்படும் அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் உள்ள வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை குப்பை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அலுவலகங்களுக்கு ரூபாய் 300 முதல் ரூபாய் 3000 வரையிலும், திருமண மண்டபங்களுக்கு ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும், உணவு கூடங்களுக்கு ரூபாய் 300 முதல் 5000 வரை குப்பை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் குப்பை கட்டணம் அறிவிப்புக்கு திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பொதுமக்கள் மத்தியிலும் இதனால் அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிப்பது காலவரம்பின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் குப்பை வரி வசூலிக்க இருந்த நிலையில் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அனேகமாக தேர்தலுக்கு பின் குப்பை கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்