முன்னாள் அதிமுக எம்பி காலமானார்: அதிர்ச்சியில் தொண்டர்கள்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (09:37 IST)
அதிமுகவை சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை எம்.பி. ஆர்.டி.கோபால் உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று இரவு 9.45 மணிக்கு மாநிலங்களவை எம்.பி. ஆர்.டி.கோபால் காலமானதாக் அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உயிரிழந்த ஆர்.டி.கோபால் கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மறைந்த ஆர்.டி.கோபால் மகன் ஆர்.டி.ஜி. குமரன் அவர்கள் தற்போது அமமுகவின் பிரமுகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.டி.கோபால் அவர்களுக்கு அதிமுகவை சேர்ந்த பிரமுகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.டி.கோபால் அவர்களின் மறைவு தேனி பகுதி அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்