குரூப் 1 தேர்வு நேர்காணலில் முறைகேடு – பேனாவுக்குப் பதில் பென்சில் ஏன் ?

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (13:29 IST)
இம்மாத இறுதியில் நடக்க இருக்கும் குரூப் 1 தேர்வுகளின் நேர்காணலில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடந்த குரூப்- 1 முதன்மை தேர்வுகள் நடைபெற்றன. 181 பணியிடங்களுக்கான அந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்காணல் செய்பவர்களிடம் கலந்துகொள்பவர்களின் மதிப்பெண்களை பேனாவால் எழுதாமல் பென்சிலால் எழுதவேண்டும் தமிழக அரசு, கூறியுள்ளதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் நேர்காணலில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பென்சிலால் எழுதினால் மதிப்பெண்களை எளிதாக மாற்ற முடியும் என்பதால் இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்