தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்.. தடுப்பணையை தாண்டி வரும் தண்ணீர்..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (12:18 IST)
தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தடுப்பணையை தாண்டி தண்ணீர் வருவதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
ஒரு பக்கம் அக்னி நட்சத்திரம் வெயில் காலம் என்றாலும் இன்னொரு பக்கம் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம், 
 
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
குறிப்பாக பரக்காணி - வைக்கல்லூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி தண்ணீர் வருவதால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விட்டதாகவும் இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் வர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அந்தந்த மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்