தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தகவலின்படி யார் யாருக்கு புதிதாக கொரோனா தொற்று இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்
1. சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் கன்னியாகுமரியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
2. சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
3.கன்னியாகுமரியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4. சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 85 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5. சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ள கழிப்பட்டூர் என்ற பகுதியை சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தமிழகத்தில் ஏற்கனவே 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது