தமிழகத்தின் ஐந்து முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (19:11 IST)
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது குறித்து செய்திகளை பார்த்து வருகிறோம். இன்று கூட தமிழகத்தில் 17 ஆயிரத்து 321 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை ஈரோடு சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
கோவை - 2,319
 
ஈரோடு - 1,405
 
சென்னை - 1,345
 
சேலம் - 957
 
திருப்பூர்- 913
 
கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவை மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் அதிக பாதிப்பு இருந்து வருவதைப் போலவே இன்றும் சென்னையை விட மேற்கண்ட இரண்டு நகரங்களிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்