மதுரையில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (07:49 IST)
மதுரையில் துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு தீயணப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர்.

மதுரையில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் நவபத் கானா தெருவில், துணிக்கடை ஒன்று உள்ளது. அங்கு நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக துணிகளின் மூலம் பரவ ஆரம்பித்தது.

இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36) ஆகிய இரண்டு தீயணைப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்