14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

Mahendran

வியாழன், 13 ஜூன் 2024 (18:20 IST)
14 வயது சிறுமியை 15 வயது 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜார்கண்ட் மாநிலத்தில் அம்மா அப்பா இல்லாத 14 வயது சிறுமி தனது சகோதரி மற்றும் மாமாவுடன் வசித்து வரும் நிலையில் அவரை 15 வயது சிறுவர்கள் குழு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 
 
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்களில் ஒருவர் சிறுமியின் காதலன் என்றும் அந்த சிறுவர் அந்த சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை அடுத்து அந்த சிறுவனின் நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.
 
மேலும் இவர்களில் ஒருவன் இதனை வீடியோ எடுத்த நிலையில் சிறுமி உதவிக்காக அழும் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் சென்றபோது சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியுடன் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சிறுவன் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு யாரும் இல்லை என்றும் குற்றவாளிகளான 5 சிறுவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்