கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:17 IST)
தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து. இதில் காயடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

 
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்த பொன்திவாகர் மற்றும் ரவீந்திரராஜ் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளனர். 
 
பேருந்தில் இருந்த 4 பள்ளி மாணவர்கள், பொன்திவாகர் மற்றும் ரவீந்திரராஜை கத்தியால் குத்தினர். பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய அந்த 4 மாணவர்களையும் பிடித்தனர். 
 
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த 4 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விசாரனையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 9 ஆம் வகுப்புதான் படிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுள் என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்