ஆன்லைன் மூலம் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை: விவசாயிகள் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:36 IST)
ஆன்லைன் மூலம் மட்டுமே விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் இனிமேல் நெல் விற்பனை செய்ய வேண்டும் என்றும், அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்து நெல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
நேரடி நெல் கொள்முதல் நிலையம் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால் தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்திற்கு டெல்டா மாவட்ட மக்களில் ஒரு சிலர் வரவேற்பு  தெரிவித்துள்ளனர். ஆனாலும் பெரும்பாலான விவசாயிகள் இந்த திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
முன்னதாக மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண்மை சட்டத்தில் வர்த்தகர்களின் பான் கார்டு விவரங்கள் மற்றும் மின்னணு பதிவு அவசியம் என்று கூறியதற்கு திமுக முதல் கட்சியாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தது என்பதும் தற்போது திமுக அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு அவசியம் என்று கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்