நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பெயரில் யாரோ ஒருவர் போலியான டுவிட்டர் கணக்கை துவங்கி அவர் பதிவிட்டது போல் ஓர் பதிவை டுவீட் செய்துள்ளனர்.
அந்த டுவிட்டர் பதிவில் அடுத்த மாதத்தில் இருந்து டிக்கெட் விலையை உயர்த்துவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் பொங்கி எழுந்து தங்கள் எதிர்ப்பை கம்மெண்டுகளாக போட்டுத்தள்ளினர்.
இதனையடுத்து சமுத்திரக்கனி தரப்பில் இருந்து அந்த டுவிட்டர் கணக்கு தன்னுடையது இல்லை என விளக்கம் தரப்பட்டு, காவல்துறையிடமும் அந்த போலி டுவிட்டர் கணக்கு குறித்து புகார் அளித்துள்ளார்.