”அதிர்ஷ்டம் தரும் அல்பினோ முதலை.. 10 பேருக்கு ஷேர் செய்தால்..” – சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் முதலை!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (09:29 IST)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிர்ஷ்டத்தை தரும் என சொல்லி அல்பினோ முதலையின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.



உலகம் முழுவதும் பல வகை முதலைகள் ஏராளமாக இருந்து வருகின்றன. ஆனால் சில முதலைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அப்படியான ஒரு முதலைதான் வெள்ளை முதலை எனப்படும் அல்பினோ முதலைகள். உலகம் முழுவதுமே இந்த வெள்ளை அல்பினோ முதலைகள் 100ல் இருந்து 200க்குள்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அரிய வகை முதலையான இந்த அல்பினோ முதலை தற்போது அதிர்ஷ்ட முதலையாக மாறியுள்ளது. கடந்த மே 30ம் தேதி அன்று Dre Ennis என்ற பேஸ்புக் பயனாளர் ஒருவர் அல்பினோ முதலையின் படத்தை ஷேர் செய்து “ஒவ்வொரு முறை அல்பினோ முதலையின் படத்தை ஷேர் செய்யும்போதும் பணம் அல்லது நல்ல செய்திகள் வருவதாக கூறுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார். அது வைரலானது.



தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்று வரும் நிலையில் இந்த அல்பினோ முதலை படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வேண்டி கொண்டால் இந்திய அணி வெற்றி பெறும் என யாரோ கிளப்பி விட பலரும் இந்த முதலையின் படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

சிலர் சமூக வலைதளங்களில் அல்பினோ முதலை படத்தை ஷேர் செய்து தங்களுக்கு இன்னது வேண்டும் என வேண்டிக் கொள்ள தொடங்கியுள்ள நிலையில், பலர் அதை கிண்டல் செய்தும் வருகின்றனர். இதனால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முழுவதும் அல்பினோ முதலை ட்ரெண்டாகியுள்ளது.



Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்