சென்னையில் மின்சார பஸ்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிமீ பயணம்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (10:00 IST)
சென்னையின் போக்குவரத்தை மின்சார ரயில்கள் ஓரளவு சமாளித்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் மின்சார பஸ்களும் இயங்கவிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து தான் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் மின்சார பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்
 
மின்சார பஸ்களின் விலை மிக சற்றும் அதிகம் என்றாலும் அந்த பஸ்களை இயக்க ஆகும் செலவு மிகவும் குறைவு. நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையுயர்வினை கணக்கில் கொண்டு மின்சார பஸ்களை அதிகம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
மின்சார பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரத்தை 54 பயணிகளோடு பயணிக்கலாம். மேலும், பஸ்களை சார்ஜ் செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்ய  வேண்டியது அவசியம்.  சென்னையில் இந்த பஸ்களை எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது அதற்காக எந்தெந்த இடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைப்பது என்பது குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஆய்வு நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்