சென்னை மெட்ரோ சுரங்கத்திலும் சேவை: ரிலையன்ஸ் ஜியோ!

புதன், 22 ஆகஸ்ட் 2018 (13:20 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கத்திலும் துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல் இதோ...
 
சென்னையில் மாநகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது, கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரெயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. 
 
இதில், திருமங்கலம் - நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் ரயில் பயணிப்பதால் 7.6 கிமீ தூரத்திற்கு பயணிகளுக்கு மொபைல் நெட்வொர்க் இல்லாமல் இருந்தது. இதனை தற்போது ஜியோ நிறுவனம் சரிசெய்துள்ளது. 
 
பயணிகளுக்கு தடையின்றி செல்போன் சேவையை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் நவீன கருவிகளை அமைத்து உள்ளது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இனி நெட்வொர்க் பிரச்சனை வராது. 
 
கூடிய விரைவில் ஏர்டெல், வோடபோன் உள்பட மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவைகளும் துவங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்