அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தான்.. அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (10:00 IST)
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் ஆணையம்  பதிவேற்றம் செய்ததுள்ளது.
 
அதிமுக வழக்குகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் உண்மையான அதிமுக ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்