தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்காங்கே தேர்தலில் சில குளறுபடிகள் நடந்தாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.