144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்குமா? புதுவை கலெக்டர் விளக்கம்!

திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:50 IST)
144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்குமா? புதுவை கலெக்டர் விளக்கம்!
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலின்போது அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அவர்கள் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் 
 
இதன்படி அமைதிக்கு எதிராக சட்ட விரோத நடவடிக்கையில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல், கோஷங்கள் எழுப்புதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது 
 
ஆனால் அதே நேரத்தில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கு தடை இருக்காது என்றும் திருமணங்கள் இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்த 144 தடை உத்தரவு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் தற்போது இருக்கும் 144 தடை உத்தரவு காரணமாக வாக்குப்பதிவு பாதிக்குமா என்ற கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பதிலளித்துள்ளார் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இருந்தாலும் வாக்குப்பதிவில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து வாக்களிக்க செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்