75% கட்டணம் மட்டுமே வாங்க வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (20:06 IST)
75% கட்டணம் மட்டுமே வாங்க வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணம் பெறுவது குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
இதன்படி தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் சிபிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. 
 
மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல்  மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து புகார் வராத வகையில் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்