வெட்கம்! வெட்கம்! வெட்கம்! எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:17 IST)
எதிர்பார்த்ததைப் போல 18 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்து, சட்ட சபையில் நம்பிக்கை வாக்கு கோர இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. உண்மையில் இது வெட்கம்! வெட்கம்!  வெட்கம்!   எடப்பாடி பழனிச்சாமி  அவர்களே!.


 


உண்மையில் அவர் வாக்கு கோர வேண்டியது சட்ட மன்றம் அல்ல! மக்கள் மன்றம்! அணையும் ஜோதி கொஞ்சம் பிரகாசமாக எரிகிறது அவ்வளவுதான்.
 
இது வாலியின் வதை படலம் போல, தினகரன் வதை படலம் அல்ல, இது ஜனநாயக வதை  படலம்! வெட்கம்!  வெட்கம்!  வெட்கம் !   எடப்பாடி பழனிச்சாமி  அவர்களே! எங்கே  அந்த வீழ்ந்து விடாத வீரம் ? எங்கே அந்த மண்டியிடாத மானம்? அனைத்தும் ஜெயலலிதாவின் சமாதிக்குள் சமாதி ஆகி விட்டதா என்ன? வெட்கம்!  வெட்கம்!  வெட்கம்! எடப்பாடி பழனிச்சாமி  அவர்களே!
 
எதிர்பார்த்ததைப் போல எதிரியை பலவீனப்படுத்தி தன் பலம் காட்ட நினைக்கிறீர்களா? வெட்கம்!  வெட்கம்!  வெட்கம்!   எடப்பாடி பழனிச்சாமி  அவர்களே!
 
மக்கள் எடப்பாடிக்கோ, பன்னிர் செல்வத்திற்கோ வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்களித்தது என்னவோ ஜெயலலிதாவுக்கே ! அவரே இல்லாத போது எப்படி வரும் எந்த கட்சி ? கட்சி தாவல் சட்டம் எல்லாம்.
 
குறுக்கு வழியில் வாழ்வு தேடும் திருட்டு உலகமடா! இவர்கள் கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருடுற கூட்டமடா! வெட்கம்!  வெட்கம்!  வெட்கம்! எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
 
என் அரசை கலைக்க முடியாது  என்கிறீர்..  கவிழ்க்க முடியாது என்கிறீர்! மாமியார் வீட்டுக்கு நீ போவாய் என்கிறீர்!  நீ மாமியார் வீட்டுக்கு  போக வேண்டிய ஆள்தான் என்கிறார் இன்னொருவர். என்னதான் ஆச்சு நம் தமிழகத்திற்கு? 
 
ஜெயலலிதாவிற்க்கு பின் தமிழகம் இல்லாதது இழந்து கொண்டிருப்பது எல்லாம் விதி என்று சொல்ல முடியாது. இங்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வெற்றிடத்தை யார் யாரோ நிரப்ப முயல்கிறார்கள் என்பது தான் தமிழனின் விதி.  
 
சீதை தன்னை நெருப்பில் இறக்கி, தன் கற்பை நிரூபித்ததுப்போல இந்த எடப்பாடி அரசின் அனைத்து எம்.எல்.ஏ க்களும் தேர்தலில் நின்று மக்களை சந்திக்க தயாரா?


 
இரா காஜா பந்தா நவாஸ்
sumai244@gmail.com

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்