இன்று சென்னை வரும் ஆளுநர் - நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவு?

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (09:42 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர இருக்கிறார்.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் நேற்று சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது எடப்பாடி அரசு. இந்நிலையில், திமுக எம்.ல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதேபோல், நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டமும் நடைபெற இருக்கிறது.
 
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
அந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார். இந்நிலையில், அவர் இன்று தமிழகம் வருகிறார்.
 
அவர் சென்னை வந்தவுடன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் தமிழகம் வருவது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்