அதிருப்தியை சம்பாதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி: தேர்தலை பாதிக்குமா?

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (18:52 IST)
ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ப்பட்ட வழக்கின் விசாரணையின் போது காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. 
 
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முதல்வர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். 
 
இதற்கு தமிழக அரசு, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது. 10,000 பணிக்கு 3 லட்சம் பணியாளர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனால் போராடும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது. யாருடனும் முதல்வர் பேச்சு நடத்த மாட்டார் என்று அரசு கூறியுள்ளது.
 
ஏற்கனவே அதிமுக பாஜகவின் பிடியில் உள்ளது என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தமிழக முதல்வர் இந்த போராட்டத்திற்கு பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு வரமால் இது போன்ற முடிவுகளை எடுப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்