கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள் – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:29 IST)
தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு குறைத்து காட்டுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்ஸிஜன் வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்