எஸ்.வி.சேகர்-லா ஒரு ஆளா... ஊதி தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (14:39 IST)
தற்போது எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அதிமுக கொடி குறித்து எஸ்வி சேகர் விமர்சனம் செய்ததும், அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் எஸ்வி சேகர்-ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. அவர் பெரிய அரசியல் கட்சி தலைவராக நாங்கள் எண்ணவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்