ஆளுனருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. ஆட்சி அமைக்க வாய்ப்பா?

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (20:41 IST)
தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறிது நேரத்திற்கு முன்னர் அவரது அழைப்பின்பேரில் ராஜ்பவனில் சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது தனக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், தன்னை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். எடப்பாடி பழனிச்சாமியுடன் முத்த அமைச்சர்கள் 10 பேர் ஆளுனரை சந்தித்தனர்

இந்நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், 'தங்கள் அணிக்கு  124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாகவும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளைக்குள் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் அவர் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

மேலும் 124 எம்எல்ஏ-க்கள் ஆதரவு எங்களிடம் உள்ளதால் ஆளுநர் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்