மோடி பிரதமராக நாங்க ஓட்டுக்கேட்டோம்… எஸ்வி சேகர் என்ன செஞ்சாரு – தமிழக முதல்வர் கோபம்!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (20:31 IST)
நடிகர் மற்றும் அரசியல்வாதியான எஸ் வி சேகருக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் அதிமுக கொடி அதில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்கவேண்டும் என்றும் எஸ்வி சேகர் விமர்சனம் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எஸ்வி சேகர்-ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மேலும் அது குறித்து பேசிய முதல்வர் ‘எஸ் வி சேகர் பாஜகவுல இருக்காரா? மோடி இந்தியாவின் பிரதமரா வரணும்னு நாங்க எல்லாரும் ஊர் ஊரா போய் ஓட்டி கேட்டோம். அவர் எங்காச்சும் பிரச்சாரம் பண்ணாரா?. அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்