அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்..!

சனி, 15 ஜூலை 2023 (12:45 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆட்கொணர்வு மனு மீது தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் இந்த தீர்ப்பில் நீதிபதி சிவி கார்த்திகேயன் அமலாக்க துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளது. செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது என்றும் நீதிமன்ற காவல் சட்டப்படியானது என்றும் மூன்றாவது நீதிபதி ஏற்பட்டுள்ள இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்