செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கின்றதா அமலாக்கத்துறை? பரபரப்பு தகவல்..!

வெள்ளி, 14 ஜூலை 2023 (17:00 IST)
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் சற்று முன் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் சிகிச்சை காலத்தை காவலாக கருத முடியாது என்றும் முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்க துறையை காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் நீதிபதி சிவி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் சுப்ரீம் கோர்ட் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு தற்போது உரிமை உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
எனவே செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைகள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை விரைவில் அமலாக்கத்துறை காவலில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்