கேப்டன் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அடிப்படை தொண்டரின் குழந்தைக்கு காதணி விழா!

J.Durai
வியாழன், 18 ஜூலை 2024 (13:56 IST)
சென்னையில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்  நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பொதுமக்கள் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி கோவிலாக வழிபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் பால்கண்ணன்.
 
இவர் தேமுதிக வின் அடிப்படை தொண்டராகவும், விஜயகாந்த் அவர்களின் விசுவாசியாகவும் இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் பால்கண்ணன் - சுமித்ரா தம்பதிக்கு பிரதீபா, ரிஷிகிருஷ்ணன், நந்தகோபாலகிருஷ்ணன் என மூன்று  குழந்தைகள உள்ளனர்.
 
இதில் நந்த கோபாலகிருஷ்ணன் என்ற குழந்தைக்கு கேப்டன் விஜயகாந்ந் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று காதுகுத்து விழா நடத்தி கேப்டன் ஆசிர்வாதம் பெற்றால் வாழ்வு வளம்பெறும் என்று எண்ணியுள்ளார்.
 
இதனால்  பால்கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 30 க்கும் மேற்பட்டோருடன் உசிலம்பட்டியிலிருந்து இரயில் மூலம் சென்னை சென்று  கேப்டன் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அவர்களிடம் வாழ்த்து பெற்று பின்னர் தனது குழந்தைக்கு கேப்டன் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு தனது குழந்தைக்கு காத்து விழா நடைபெற்றது.
 
இதில் கேப்டன்விஜயகாந்த் அவர்களின் ஆசிர்வாதமும் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து கிடைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார். இதில் தேமுதிக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்